சிந்தா விளக்கின் செழுங்கலை நியமத்துஅந்தில், முன்றில் அம்பலப் பூடிகைத்தங்கினன். வதிந்தத் தக்கணப் பேரூர்,ஐயங் கடிஞை கையின் ஏந்தி,மையறு சிறப்பின் மனைதொறும் மறுகிக்,“காணார், கேளார், கான்முடப் பட்டோர்,பேணுநர் இல்லோர், பிணிநடுக்கு உற்றோர்;யாவரும் வருக” என்று இசைத்துடன் ஊட்டி,உண்டொழி மிச்சிலுண்டு, ஓடுதலை மடுத்துக்,கண்படைக் கொள்ளும் காவலன் தானென் -